1.இயேசு நாதா! காக்கிறீர் , இளைப்பாறச் செய்கிறீர் , மோசம் நேரிடாமலும் , பாதம் இடறாமலும், என்னைத் தாங்கி நிற்கிறீர் ; நேச நாதா காக்கிறீர். 2.வாரிபோன்ற லோகத்தில் யாத்திரை செய்து போகையில் , சூறைக்காற்று மோதினும் , ஆழி கோஷ்டமாயினும், அமைதல் உண்டாக்குவீர் ! நேச நாதா காக்கிறீர் ! 3.சற்று தூரம் செல்லவே , மோட்ச கரை தோன்றுமே ! துன்பம் நீங்கி வாழுவேன் ; இன்பம் பெற்று போற்றுவேன் ; அதுமட்டும் தாங்குவீர் ; நேச நாதா காக்கிறீர் .